1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. jason sanjay says he will take movie with vijay

முதல்ல மைண்டுக்கு வரது அப்பாதான்!.. அவரதான் நடிக்க வைப்பேன்!. ஜேசன் சஞ்சய் ஓப்பன்..

jason sanjay
தளபதி என அழைக்கப்பட்டு தற்போது அரசியல்வாதியாக மாறி தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருப்பவர் விஜய். இவரின் மகன் ஜேசன் சஞ்சய் விஜய் நடித்த வேலைக்காரன் திரைப்படத்தில் அவரோட சேர்ந்து நடனமும் ஆடியிருந்தார். எனவே, பின்னாளில் அவரும் சினிமாவில் நடிப்பார் என எல்லோரும் நினைத்தனர்.

ஆனால், அவரோ சிக்மா திரைப்படம் மூலம் இயக்குனராக மாறிவிட்டார். சிக்மா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல் சிக்மா ரிலீசுக்கு பின் ஒரு படத்தில் ஜேசன் சஞ்சய் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஒரு கேள்வி கேட்டார்.

‘நீங்கள் ஜேசன் என்றாலும் எனக்கு பிடித்த நடிகர் ஜேசன் ஸ்டேதம் ஹாலிவுட்டில் இருக்கிறார். அந்த ஜேசன் சிக்மா படத்தை பார்த்துவிட்டு உங்களின் இயக்கத்தில் நடிக்க கூப்பிட்டால் இந்தியாவிலிருந்து எந்த நடிகரை கூட்டிச் செல்வீர்கள்?’ என கேட்டார் அதற்கு பதில் சொன்ன ஜேசன்  ‘முதல்ல மைண்டுக்கு வரது அப்பாதான்.. ரெண்டு பேர் காம்பினேசஹன் சூப்பரா இருக்கும்’ என்று கூறியிருக்கிறார்..

விஜய்க்கும் அவரின் குடும்பத்திற்கு இடையே பிரச்சனை. ஜேசன் அப்பா விஜயிடம் பேசுவதில்லை என்றெல்லாம் பலரும் சொல்லி வரும் நிலையில் ஜேசன் இப்படி சொல்லியிருப்பது விஜய் ரசிகர்களை நெகிழவைத்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஜனநாயகனை தொடந்து Toxic ரிலீஸிலும் பஞ்சாயத்தா? .. KVN புரட்யூசர் பாவம்!..