1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. IT companies allowed work from home because of water problem

கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு: ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ஐடி நிறுவனங்கள்

சென்னை
சென்னை தவிர கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்துள்ளதால் பொதுமக்களின் தண்ணீர் தேவை ஓரளவுக்கு பூர்த்தியாகி வருகிறது. ஆனால் சென்னையில் மழை பெய்து மாதக்கணக்கில் ஆகிவிட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கி வந்த ஏரிகளும் வறண்டுவிட்டதால் சென்னை மக்கள் தண்ணீருக்காக திண்டாடி வருகின்றனர்.
 
இந்த நிலையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஐடி நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. சென்னை ஓ.எம்.ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளில் உள்ள பெரும்பாலான ஐடி நிறுவனங்களில் குடிநீர் உள்ளிட்ட மற்ற தேவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஐடி நிறுவனங்கள் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாம்
 
ஒருசில ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிசெய்ய நிறுவனங்கள் அனுமதித்துள்ளதாம். இன்னும் சில நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனங்களின் மற்ற ஊர்களில் உள்ள கிளைகளுக்கு அனுப்பி பணியை செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு வகுப்புகளும் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு எடுக்கப்பட்டு வருகிறதாம். இன்னும் ஒருசில வாரங்கள் சென்னையில் மழை பெய்யாமல் போனால் நிலைமை மிகவும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
நடிகர் சங்க தேர்தல் - தமிழக அரசு, ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு?