செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 ஜூன் 2019 (08:42 IST)

சென்னையின் முக்கிய சாலையில் திடீரென தோன்றிய பள்ளம்: பெரும் பரபரப்பு

சென்னையில் உள்ள ஒருசில முக்கிய சாலைகளில் அவ்வப்போது பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை பயமுறுத்தி வருவது தெரிந்ததே. சமீபத்தில் கூட சென்னை அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலம் அருகே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு அதில் பேருந்து, கார்கள் சிக்கி கொண்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் நேற்றிரவு சென்னை மத்தியகைலாஷ் சிக்னல் அருகே உள்ள சாலையில் மீண்டும் திடீரென பெரிய பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது. ஏற்கனவே அதே பகுதியில்தான் இரண்டு வாரங்களுக்குமுன் ஒரு பள்ளம் தோன்றிய நிலையில் இரண்டே வாரங்களில் அதே இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்த பள்ளம் இரவு நேரத்தில் ஏற்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் உள்ள ஒருசில பகுதிகளில் திடீர் பள்ளம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மெட்ரோ ரயில் வேலை நடந்தபோது இந்த பள்ளத்திற்கு அதனை காரணமாக கூறப்பட்டது. ஆனால் தற்போது மெட்ரோ வேலைகள் முடிந்தபின்னரும், மெட்ரோவுக்கு சம்பந்த இல்லாத இடங்களிலும் பள்ளம் ஏற்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.