1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Is Rajinikanth joined with Kamal in politics?

கமலுடன் இணைந்து அரசியலா? ரஜினியின் சூப்பர் பதில்

rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருமே ஜெயலலிதா, கருணாநிதியால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப அரசியல் களத்தில் குதித்துள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலில் நுழைந்துள்ளதால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை கண்டுள்ளது.

இந்த நிலையில் இருவரும் தனித்தனியாக களமிறங்குவதைவிட இருவரும் இணைந்து களம் கண்டால் வெற்றி உறுதி என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரஜினிகாந்த், 'கமல்ஹாசனுடன் இணைந்து அரசியல் செய்வதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்'' என்று சூப்பர் பதில் ஒன்றை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்

ஏற்கனவே ரஜினியுடன் இணைந்து அரசியல் செய்வதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கமல்ஹாசன் கூறியிருப்பதால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இருவரும் இணைந்தே போட்டியிடுவார்கள் என்றே கணிக்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
உலகின் முதல் ஹைட்ரஜன் எரிவாயு சைக்கிளின் விலை என்ன தெரியுமா? கேட்டால் மயங்கிவிடுவீர்கள்