1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (10:56 IST)

சென்னையில் இருந்து கேதார்நாத்துக்கு சிறப்பு விமானம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு..!

irctc
இதுவரை சிறப்பு ரயில்களின் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு இருந்தால் ஐஆர்சிடிசி தற்போது சிறப்பு விமானம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு விமான விமானம் இயக்கப்படும் என ஐஆர்சிடிசி  அறிவித்துள்ளது
 
சென்னையிலிருந்து ஜூன் 28ஆம் தேதி இந்த சிறப்பு விமானம் கிளம்பும் என்றும் கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ், ஹரித்வார் ஆகிய பகுதிகளுக்கு இந்த விமானத்தில் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 அதேபோல திருச்சியில் இருந்து ஜூன் 16ஆம் தேதி சிறப்பு விமானம் ஒன்று கிளம்பி கயா, காசி, அலகாபாத் மற்றும் அயோத்தி ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளதாகவும் இந்த விமானத்தில் பயணம் செய்ய 9003140682, 9003140680 ஆகிய எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதல் முறையாக விமானத்தின் மூலம் சுற்றுலா செல்ல ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளதை அடுத்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran