வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (09:03 IST)

சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்! – கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

CSK Fans
ஐபிஎல் போட்டிகளில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று விற்கப்பட்டு வருகின்றது.

பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவை நெருங்கியுள்ளன. தற்போது புள்ளி வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் தகுதி பெற மீதமுள்ள 2 போட்டிகளில் ஒரு போட்டியிலாவது வெல்ல வேண்டும்.

இந்நிலையில் மே 14ம் தேதி சிஎஸ்கே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கே தொடங்கிய நிலையில் ஏராளமான ரசிகர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

சமீபமாக சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவது சர்ச்சையாகி வந்தது. அதுபோல டிக்கெட் கவுண்டர்களில் மாற்று திறனாளிகளுக்கு தனி வரிசை இல்லாதது குறித்தும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று டிக்கெட் கவுண்ட்டர்களில் ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ரூ.3,000 மற்றும் ரூ.5,000 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விற்கப்படும் எனவும், மாற்று திறனாளிகள் மேட்ச் டிக்கெட்டுகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் காலை 10.30 முதல் 11 மணிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K