1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. First team to win 25 runs! CSK created many records in one match!

25-ஐ தாண்டாமல் வென்ற முதல் டீம்! ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த சிஎஸ்கே!

CSK achievements in IPL
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் வியக்கத்தகு சில சாதனைகளையும் படைத்துள்ளது.

பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகளில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 167 ரன்களே குவித்திருந்தாலும், சேஸிங்கில் டெல்லியை 140 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றி மூலம் சிஎஸ்கே சில சாதனைகளையும் செய்துள்ளது.

இந்த போட்டிகளில் பில் சால்ட்டின் கேட்ட்சை பிடித்ததன் மூலம் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு ஐபிஎல் போட்டிகளில் தனது 100வது கேட்ச்சை தொட்டு சாதனை படைத்தார்.

ஐபிஎல் போட்டிகளில் முதன்முறையாக ஒரே சீசனில் மூன்று முறை ப்ளேயர் ஆப் தி மேட்ச் விருதை சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார்.

இதுபோக சிஎஸ்கே அணியே மொத்தமாக ஒரு நூதனமான சாதனையை படைத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் எந்த ஒரு வீரரும் 25 ரன்களுக்கு அதிகமாக அடிக்காமலே போட்டியை வென்றது ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாம். நேற்றைய போட்டியில் ஷிவம் துபே மட்டும் 25 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற அனைவரும் 25க்கு குறைவான ரன்களே பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்
கொல்கத்தா அணியின் கேப்டன் மனைவியை பின் தொடர்ந்த இளைஞர்கள்