சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம்: விண்ணை பிளந்த கோவிந்தா கோஷம்..!
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பார்த்தசாரதி பெருமாளுக்கு பிரமோற்சவம் நடைபெறும் என்றும் அதனை அடுத்து தேரோட்டம் நடைபெறும் என்பதும் தெரிந்ததே.
இதனை அடுத்து நேற்று காலை 5 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். காலை ஏழு மணி வரை தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் என்பதும் தேர் நிலைக்கு வரும் போது கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கரகோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேரோட்டம் நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran