இனிமேல் படுத்து கொண்டே விமானத்தில் பயணம் செய்யலாம்: பிரபல விமான நிறுவனம் அறிவிப்பு..!
பிரபல விமான நிறுவனம் ஒன்று எகனாமி வகுப்பு பயணிகளுக்கு படுக்கை வசதி செய்து தர இருப்பதாக அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்று நியூசிலாந்து ஏர்லைன்ஸ். இந்நிறுவனம் தங்களது விமானத்தில் எகனாமி வகுப்பு பயணிகளுக்கு படுக்கை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை அடுத்து எகனாமிக் வகுப்பு கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
படுக்கை விரிப்பு, போர்வை தலையணை போன்றவை பயணிகளுக்கு வழங்கப்படும் என்றும் இந்த படுக்கையில் படுத்து தூங்குவதற்கு நான்கு மணி நேரம் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.
படுக்கை வசதியுடன் கூடிய விமான பயணத்திற்கு புதிய கட்டணத்தை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவில் நீண்ட நேரம் பயணம் செய்யும் பயணிகள் இந்த படுக்கை வசதியை முன் பதிவு செய்து கொண்டு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva