ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம்: அமைச்சர் சேகர்பாப்பு
தமிழகத்தில் இருந்து ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேர தகவல் மையம் திறக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை மாதம் பிறக்க உள்ளதை அடுத்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை போடுவார்கள் என்பதும், இந்த ஆண்டு எந்த வித கட்டுப்பாடும் இல்லை என்பதால் கூடுதலான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் தமிழக சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேர தகவல் மையம் திறக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
இந்து சமய அறநிலை துறை ஆணையர் அலுவலகத்தில் இந்த தகவல் மையம் திறக்கப்படும் என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் 044-28339999ல் என்ற எண்ணிற்கு ஐயப்ப பக்தர்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது
இந்த தகவல் மையம் இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20 வரை செயல்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Edited by Siva