1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 5 அக்டோபர் 2022 (13:47 IST)

ஓராண்டு முழுவதும் அன்னதானம்.... 100 கோடியில் வள்ளலார் மையம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

stalin
வடலூரில் 100 கோடியில் வள்ளலார் மையம் அமைக்கப்படும் எனவும், திமுக ஆன்மிகத்திற்கு எதிரான கட்சியில்லை என்று  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வள்ளலாரின் 200 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னையில், முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அற நிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில், வள்ளலாரின் தபால் தலையை முதல்வர் ஸ்டாலின் தொங்கி வைத்தார். அதன்பின் அவர் கூறியதாவது: வடலூரில் 100 கோடி ரூபாயில் வள்ளலார் மையம் அமைக்கப்படும்; வள்ளலாரின் 200 வது பிறந்த நாளையொட்டி இந்த ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும், வள்ளலாரின் பிறந்த நாளையொட்டி, ஓராண்டு தொடர் அன்னதானத்திற்கு ரூ.3.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj