1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (11:35 IST)

அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தற்கொலை: பின்னணி என்ன?

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மூத்த சகோதரர் தூக்கிட்டு தற்கொலை.


இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் உடன் பிறந்த மூத்த சகோதரர் பி.கே. தேவராஜ். சென்னை வசித்து வரும் இவருக்கு 63 வயதாகிறது. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தொழில் செய்து வரும் நிலையில் குடும்பத்துடன் சென்னை ஓட்டேரியில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர் நேற்றிரவு 11 மணியளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சென்ற ஓட்டேரி காவல் துறையினர் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த சில வாரங்களாக இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இருப்பினும் தற்கொலைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.