தொடர்புடைய செய்திகள்
- பானிபூரி சாப்பிட்ட இளம்பெண் சுருண்டு விழுந்து பலி.. சென்னை மெரீனாவில் சோகம்..!
- சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி. கட்டடத்தின் தீ விபத்து! விரைந்த தீயணைப்பு படைகள்..!
- சென்னை ஐ.ஐ.டி.யில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை: இன்று எச்.டி. மாணவர் பரிதாப பலி..!
- சென்னையில் கொளுத்தும் வெயில்.. ஆனால் 15 மாவட்டங்களில் கனமழை என அறிவிப்பு..!
- மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐபிஎல்… மணி நேரத்திற்கு கட்டணம்! – முழு விவரம்!
சென்னை உள்பட 16 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை: வானிலை அறிக்கை..!
சென்னை உள்பட 16 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு பக்கம் கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் ஆங்காங்கே தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கோயம்புத்தூர், ஆகிய பகுதிகளில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர் மயிலாடுதுறை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை வரையும் என்றும் இடி மின்னலுடன் சில இடங்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
