வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (13:36 IST)

கொட்டும் மழையில் ஏழைகளை தேடி ஓடிய நயன்தாரா ஜோடி! – வைரலாகும் வீடியோ!

Nayanthara
நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் இரவில் ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக விக்னேஷ் சிவன், நயன்தாரா சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வந்தார். கடந்த ஆண்டில் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். மேலும் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அந்த குழந்தைகளுக்கு சமீபத்தில் உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வேக் என் சிவன் என பெயர் சூட்டிய சம்பவம் வைரலானது. இந்நிலையில் தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியின் புதிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

மழை பெய்து கொண்டிருக்கும் இரவு நேரத்தில் குடைப்பிடித்தபடி செல்லும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர் மழையில் சரியான உணவு, உடை கிடைக்காத ஏழைகளை தேடி சென்று சாலை ஓரம் வாழும் மக்களுக்கு உணவு, உடை அடங்கிய பைகளை அளித்துள்ளனர்.

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியின் மனிதாபிமான குணத்தை பலரும் வாழ்த்தியுள்ளனர்.

Edit by Prasanth.K