டிசம்பர் 23 முதல் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேற்கு வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது
இந்த நிலையில் இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது
மேலும் தெற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 22ஆம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Edited by Mahendran