வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: இந்திய வானிலை ஆய்வுத்துறை தகவல்!
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அதன் பின்னர் அந்த தாழ்வு பகுதி தீவிரமடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது