செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 ஜனவரி 2018 (18:34 IST)

அரசியலுக்கு வந்த ரஜினி - சோ சாரி.. வைரல் வீடியோ

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து இந்தியா டுடே பத்திரிக்கை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

 
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள விவகாரம், தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப்போவதாகவும், தனிக்கட்சி தொடங்கி  வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
 
தற்போது அவரது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கும் பணியில் அவரது ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தனது அரசியல் கட்சியில் இணைய விரும்புபவர்களுக்கு ஒரு இணையதளத்தை ரஜினி உருவாக்கியுள்ளார். அதில், பலரும் ஆவலுடன் தங்களை பற்றிய தகவல்களை கொடுத்து உறுப்பினர்களாகி வருகின்றனர்.
 
இந்நிலையில், சோ சாரி’ என்ற பெயரில் அரசியல்வாதிகளை கிண்டலடித்து வீடியோ வெளியிட்டு வரும் இந்தியா டுடே பத்திரிக்கை, தற்போது ரஜினி அரசியலுக்கு வந்தது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது.
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.