1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2018 (15:26 IST)

ரஜினிகாந்த் சொன்ன ‘ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு’ வார்த்தை பாடலானது...

ரஜினிகாந்த் சொன்ன ‘ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு’ வார்த்தை, பாடலாக மாறியுள்ளது.

 
கடந்த மாதம் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், கடந்த மாதம் 31ஆம் தேதி தன்னுடைய அரசியல் நிலைப்பாடு பற்றி சொன்னார். அப்போது பேசிய ரஜினி, ‘இந்த மீடியாக்காரர்களைப் பார்த்துதான் எனக்குப் பயம். இரண்டு நாட்களுக்கு முன் ஒருவர் மைக்கை நீட்டி, ‘உங்க கொள்கைகள் என்ன?’னு கேட்டார். ஒரு நிமிஷம் எனக்கு தலையே சுத்திருச்சு’ என்றார்.
 
ரஜினியின் இந்த வார்த்தை, சமூக வலைதளங்களில் பயங்கரமாக கிண்டல் செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல, இந்திய அளவில் டிரெண்டிங்காகவும் ஆனது. விஜய் ஸ்ரீ இயக்கும் ‘தாதா 87’ படத்தில், இந்த வார்த்தையை வைத்து ‘ஒரு நிமிஷம் தலை சுத்தும்’ என்ற பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
 
இயக்குநர் விஜய் ஸ்ரீ எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு, லியாண்டர் லீ இசையமைத்துள்ளார். நடிகர் ஜனகராஜின் மகன் நவின் ஜனகராஜ் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். பொங்கல் விருந்தாக இந்தப் பாடல் ரிலீஸாக இருக்கிறது.