ரஜினியின் அரசியல் வருகைக்கு ஜப்பான் ரசிகர்கள் ஆதரவு: ஜப்பான் தேர்தலில் நிற்கலாமோ?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் 31ஆம் தேதி தனது அரசியலை உறுதி செய்ததோடு, உலகில் இதுவரை எந்த அரசியல்வாதியும் கூறாத ஆன்மீக அரசியலை தான் பின்பற்றபோவதாக தெரிவித்தார்.
அவருடைய அரசியல் வருகைக்கு மிகப்பெரிய ஆதரவு மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய பயம் அரசியல்வாதிகள் மத்தியிலும் எழுந்தது. இந்த நிலையில் ரஜினியின் படங்களுக்கு ஜப்பானில் மிகப்பெரிய ஆதரவு கிடைப்பது போலவே அவரது அரசியல் வருகைக்கும் ஜப்பான் ரசிகர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
ஜப்பான் ரசிகர் ஒருவர் தனது ஆதரவை தெரிவித்து தமிழில் பேசிய ஒரு வீடியோ தற்போது சமூக இணையதளங்களில் வலம் வருகிறது. அவர் அந்த வீடியோவில் கூறியதாவது: வணக்கம், நான் அரசியலுகு வருவது உறுதி என ரஜினி சார் சொன்ன போது ஜப்பான் ரஜினி ரசிகர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். நாங்கள் தமிழர்கள் இல்லை. ஆனாலும் தமிழ் திரைப்படம், தமிழ் மக்கள் அற்புதமான தமிழ் கலாச்சாரம் ரொம்ப பிடிக்கும். எனவே நாங்கள் ரஜினி அவர்களின் அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்போம். எப்போதும் தயவுசெய்து எங்கள் நண்பராக இருங்கள். சிங்கம் ஒன்று புறப்பட்டதே! கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும். மகிழ்ச்சி' என்று கூறியுள்ளார்.
ரஜினிக்கு கிடைத்திருக்கும் இந்த ஆதரவால் ரஜினிகாந்த் தனது கட்சி வேட்பாளர் ஒருவரை ஜப்பான் தேர்தல் நிற்க வைத்தாலும் அவர் வெற்றி பெறுவார் என நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.