1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. India first 100 percent vaccinated village

100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கிராமம்!

கொரோனா
புதுச்சேரியில் உள்ள கிராமம் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட கிராமமாக மாறியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் விறுவிறுப்பாக போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களிடையே முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது அது குறைந்து மக்கள் ஆர்வமாக தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்கின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள புதுக்குப்பம் எனும் கிராமத்தில் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு 100 சதவீதம் தடுப்பூசி எடுத்துக்கொண்ட முதல் கிராமமாக மாறியுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 375 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
17 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு - உலக நிலவரம்!