விக்ரம் படத்தில் நயன்தாரா இருக்கிறாரா? லோகேஷ் பேச்சுவார்த்தை!
கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார். இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தேர்தலில் கமல் தோல்வி அடைந்ததை அடுத்து இப்போது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
இதனால் விரைவில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக ஏற்கனவே பஹத் பாசில் அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசனும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு அம்சமாக நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் முடிந்துவிட்டால் கமலுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படமாக இருக்கும்.