1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 29 மே 2021 (08:35 IST)

நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா மரணம்

நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம். 

 
கொரோனவால் மக்கள் பலர் மடிந்து வரும் நிலையில் திரைத்துறையிலும் இறப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இதில் சிலரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கே ஆக இழப்பாகவும் மாறிவிடுகிறது. அந்த வகையில், நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். 
 
இதனால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டிவி தொடர்கள், படங்களில் நடித்துள்ள இவர் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் படங்களை விமர்சனம் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.