1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Including Chennai five cities corona count details

சென்னை உள்பட 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

சென்னை
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு காரணமாக கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்தோம். இன்று கூட தமிழகத்தில் 15 ஆயிரத்து 759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 37 ஆயிரத்துக்கும் மேல் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது பாதிக்கும் மேலாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில்தான் தமிழகத்திலேயே மிக அதிகமான பாதிப்பு இருந்த நிலையில் சென்னையில் தற்போது 1,094 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதே நேரத்தில் சென்னையை விட அதிகமாக ஈரோடு மற்றும் கோவையில் பாதிப்பு இருந்தாலும் அந்த மாவட்டங்களிலும் தற்போது கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை உள்பட 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பார்ப்போம்
 
 
கோவை - 2,056
 
ஈரோடு - 1,365
 
சென்னை - 1,094
 
சேலம் - 916
 
திருப்பூர் - 853
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
மதுக்கடை திறக்க அனுமதி, டீக்கடை திறக்க அனுமதி இல்லையா? டீ பிரியர்கள் வருத்தம்!