வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (17:19 IST)

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சார்லி புகார்!

காமெடி நடிகர் சார்லி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்: என்ன காரணம்?
பிரபல காமெடி நடிகர் சார்லி சென்னை காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். தனது பெயரில் போலியான டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அதனை தொடங்கி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளா.ர் அவரது மனுவில் கூறியிருப்பதாவது:
 
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடகம், திரைப்படங்களில் நடிகராக பணியாற்றி வரும் நான், எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பெயரில், என்னுடைய அனுமதி இன்றி, இன்று ட்விட்டரில் போலியாக கணக்கு துவங்கப்பட்டு உள்ளது. 
 
இதை ஆரம்பத்திலேயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசின் காவல் துறைக்கு என் நன்றியும் வணக்கமும்’ என தனது புகார் மனுவில் சார்லி கூறியுள்ளார்.