தொடர்புடைய செய்திகள்
- மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை.- உதயநிதி!
- பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு வீடு கிடைக்காமல் போனதே திமுகவால்தான்! – பாஜக அண்ணாமலை!
- பிரதமர் திட்டத்தில் வீடு கிடைக்கல.. வருந்திய பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற திமுகவுக்கு தைரியமில்லை- ஆர்.பி. உதயகுமார்
- தொகுதி பங்கீடு..! ஓரிரு நாட்களில் இறுதி முடிவு.! செல்வப்பெருந்தகை...
திமுக- காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் பற்றிய முக்கிய தகவல்
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளனர்.
பல கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி சமீபத்தில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை அறிவித்தது. அதன்பின், நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ் நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர்கல் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சத்யமூர்த்தி பவனின் நடைபெறும் இந்த ஆலோசனையில் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் பொதுச்செயளாளர் கே.சி. வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் உள்ளிடோர் பங்கேற்றுள்ளனர். இன்றிரவுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகிறது.
மேலும், இன்னும் சற்று நேரத்தில் இரு கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்
