வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (14:08 IST)

தொகுதி பங்கீடு..! ஓரிரு நாட்களில் இறுதி முடிவு.! செல்வப்பெருந்தகை...

Selvaperundagai
மக்களவை தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெள்ள நிவாரண நிதியாக ரூ.37,000 கோடி ரூபாயை மாநில அரசு கேட்டதாகவும், ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாயைக்கூட இதுவரை ஒதுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
 
தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாமல் எப்படி வந்து வாக்கு கேட்கிறார் பிரதமர் மோடி என கேள்வி எழுப்பி அவர்,  ராமேஸ்வரம் கோயிலை உலகத்தரம் வாய்ந்த ஆலயமாக மாற்றுவேன் என 2014-ல் பிரதமர் வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை ராமேஸ்வரம் கோயிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.
 
தேர்தல் பத்திரம் பற்றிய தகவலை வெளியிட அவகாசம் கோரிய எஸ்பிஐயை கண்டித்து சென்னையில் இன்று மாலை சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ. அலுவலகம் முன்பு
ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்த செல்வபெருந்தகை,  தமிழ்நாடு மக்களை ஒருபோதும் பிரதமர் மோடி ஏமாற்ற முடியாது என கூறினார்.
 
விவசாயிகளின் நண்பன் என சொல்லும் பிரதமர் மோடி, புதிய வேளாண் சட்டத்தை ஏன் கொண்டுவந்தார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
மக்களவை தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றும் மதிமுக, விசிக உள்ளிட்ட மாநில கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடித்தபின் தேசிய கட்சியான காங்கிரஸுடன் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.