1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. illegal love against police

கள்ளக்காதலில் தூள் கிளப்பிய போலீஸார் மீது வழக்கு பதிவு

இரண்டாவது திருமணம்
தருமபுரியில் பெண் போலீசை திருமணம் செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே செங்காண்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவர் திருப்பூரில் காவல் துறை பிரிவில் ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார்.
 
இவரது மனைவி பிரீதா (25), இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். திருமணத்தின் போது 25 பவுன் தங்க நகைகள், கால் கிலோ வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் சீதனமாக கொடுத்துள்ளனர். இருப்பினும் வரதட்சனை கேட்டு, பிரீதாவை அவரது கணவர் சுப்புராஜ் கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், பிரீதாவை அவரது அம்மா- அப்பா வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார். 
 
இந்த நிலையில், காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர் ஜோஸ்பின் ஜூலிமேரியை 2ஆம் திருமணம் செய்துள்ளார். இது குறித்து, பிரீதா புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காவலர் சுப்புராஜ், அவரது 2 ஆவது மனைவி ஜோஸ்பின் ஜூலிமேரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  
About Writer
K.N.Vadivel
அடுத்த கட்டுரையில்
பிளாஸ்டிக்கில் மின்சாரம் (வீடியோ)