1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ilavarasi also affected by corona virus

சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று...!

ilavarasi
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் அவர் வரும் 27 ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன.     
 
இதனிடையே திடீரென சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு  கொண்டுசெல்லப்பட்டார். தற்போது அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும், அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.   
 
இந்நிலையில் தற்ப்போது சசிகலாவை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
விசாரணைக்கு ஆஜராக பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்...!