1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (20:24 IST)

சசிகலா சுயநினைவுடன் இருக்கிறார் - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

சசிகலாவுக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
 
நேற்று முன்தினம் பெங்களூரு அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டார்.
 
பின்னர் அவருக்கு சிறைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இரவில் மீண்டும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
 
இந்நிலையில், நேர்று மாலை சசிகலாவுக்கு தைராய்டு, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனையால் பாதிகப்பட்டுள்ளதால் சசிகலா தற்போது விக்டோரியா மருத்துவமனையில் உள்ள ஐசியுவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவருக்கு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
மருத்துவரின் கண்காணிப்பில் உள்ள சசிகலாவுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. மற்றொரு பக்கம் சசிகலா உறவினர்கள் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி வந்தனர்.
 
இந்நிலையில் சசிகலா (66)  உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதில், சசிகலாவுக்கு ஆக்சிஜன் செறிவின் அளவுன் 98 சதவீதமாக இருப்பதுடன் அவர் சுயநினைவில் உள்ளார். நுரையீரல் தொற்று இருப்பதால் அவருக்கு மூச்சிறைப்பு இருக்கிறது. அதனால் மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து 14 நட்கள் கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.