மறுபடியும் ரூ.10,000 வழங்கும் தமிழக அரசு.. ரூ.2500 சம்பளமும் உயர்வு.. யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்?
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஓவியம், உடற்கல்வி, இசை உள்ளிட்ட பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, மொத்தம் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியத்தில் ரூ.2,500 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் மே மாதத்திற்கு மட்டும் சிறப்பு உதவி தொகையாக ரூ.10,000 வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பயிற்றுநர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. பயிற்றுநர்களின் பொருளாதார சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த ஊதிய உயர்வு மற்றும் மே மாத சிறப்பு நிதி வழங்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற நலத்திட்டங்கள் கல்வித்துறையில் பணியாற்றுபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் பயிற்றுநர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Edited by Siva