1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 30 ஜனவரி 2021 (16:40 IST)

' பாமக இல்லாத கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி '' - பிரேமலதா விஜயகாந்த் தகவல்

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அனைத்துக் கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த விஜயகாந்தின் தேமுதிக இனிவரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்று முதலில் தகவல் வெளியானது.

இதற்கிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று பகிரங்கமாகப் பேசவே கூட்டணிக்குள் சர்ச்சை உருவானது.

இருப்பினும் அதிமுக – தேமுதிககூட்டணியில் இருப்பதாகவே கூறப்பட்டது. இந்நிலையில் கூட்டணியில் உரிய மதிப்பு அளிக்காவிடில் 234 தொகுதிகளிலும்  தனித்துப் போட்டியிடவுள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நாளை முக்கிய முடிவு எடுப்பார் என்று தகவல் கூறியுள்ளார்.

மேலும், அதிமுகவுடன் கூட்டணி என்றால் பாமக இல்லாத கட்சியுடனே கூட்டணி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.