செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 ஜனவரி 2021 (10:47 IST)

பாமக நிறுவனர் ராமதாஸின் தம்பி காலமானார் – நேரில் சென்று அஞ்சலி!

பாமக நிறுவனர் ராமதாஸின் தம்பி சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

பாமக என்ற கட்சியை தொடங்கி வடமாவட்டங்களில் அதை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக உருவாக்கியுள்ளார் ராமதாஸ். அவரின் குடும்பத்தை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு வருகிறார். இந்நிலையில் ராமதாஸின் உடன் பிறந்தவரான சீனிவாசன் என்பவர் அவர் கட்சியில் சேராமல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தார்.

நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சீனிவாசன் நேற்று உயிரிழந்துள்ளார். இதையறிந்த ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.