அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா? 31 ஆம் தேதி ஆலோசனை!

Last Updated: ஞாயிறு, 24 ஜனவரி 2021 (16:17 IST)

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக தேர்தலுக்கு அந்த கூட்டணியில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளும் கட்சியாக உள்ள அதிமுக தனது தோழமை கட்சியான பாஜகவுடனான கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் பாமக, தேமுதிக உள்ளிட்டவற்றுடன் கூட்டணி குறித்து பேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாமக அதிமுக கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்க 31 ஆம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டம் முதலில் நாளை நடப்பதாக இருந்த நிலையில் இப்போது 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :