திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (09:12 IST)

2 தொகுதிகளில் போட்டியிடுவேன்: டிடிவி தினகரன் அதிரடி

வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அதிலும் இரண்டு இடங்களில் போட்டியிடுவேன் என்றும் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்னை திரும்பிய நிலையில் தற்போது அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அமமுக என்ற கட்சியை கண்டுகொள்ளாமல் இருந்த ஊடகங்களும் தற்போது டிடிவி தினகரனிடம் மாறி மாறி பேட்டி எடுத்து வருகின்றனர்
 
அந்த வகையில் இன்று அவர் அளித்த பேட்டியில் ’வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என்றும் அது மட்டுமின்றி தேனி தொகுதியிலும் போட்டியிடுவேன் என்றும் கூறியுள்ளார்
 
சசிகலா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சட்டவாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தினகரன் கூறியுள்ளார். மேலும் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்