1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (08:53 IST)

சசிகலா குறித்து டிடிவி தினகரனிடம் ரஜினிகாந்த் விசாரித்தது என்ன?

சசிகலா குறித்து டிடிவி தினகரனிடம் ரஜினிகாந்த் விசாரித்தது என்ன?
சிறையிலிருந்து விடுதலையான சசிகலா நேற்று பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி சென்னை திரும்பியுள்ள சசிகலாவின் உடல் நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொலைபேசி மூலம் அவரிடம் உடல் நலம் விசாரித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் சசிகலாவின் உடல்நிலை குறித்து டிடிவி தினகரன் இடம் விசாரித்ததாக தெரிகிறது. இதனை டிடிவி தினகரன் இன்று அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் சசிகலாவின் உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் விசாரித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு பல்வேறு யூகங்களையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது