புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (08:28 IST)

அதிமுக பொதுக்குழுவை கூட்ட சசிக்கலாவுக்குதான் அதிகாரம்! – ஆட்டத்தை தொடங்குகிறதா அமமுக?

அதிமுக பொதுக்குழுவை கூட்ட சசிக்கலாவுக்குதான் அதிகாரம்! – ஆட்டத்தை தொடங்குகிறதா அமமுக?
சசிக்கலா விடுதலையாகி சென்னை வந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவை கூட்ட அவருக்கே அதிகாரம் உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டபின் நேற்று பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார். வரும் வழியில் அவருக்கு ஏராளமான அமமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் அரசியல் அரங்கில் அமமுக தனது ஆட்டத்தை தொடங்குவதாக தெரிகிறது. தற்போது பேசியுள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “சசிக்கலாதான் அதிமுக பொது செயலாளர் என்பதால் அதிமுக பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் அவருக்கு உள்ளது” என பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடபோவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.