புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (08:17 IST)

சசிகலாவை வரவேற்க வந்த அமமுக பெண் தொண்டருக்கு ஏற்பட்ட கொடூரம்!

சசிகலாவை வரவேற்க வந்த அமமுக பெண் தொண்டரிடம் வழிப்பறி கொள்ளையாக தங்க சங்கிலி பறிப்பு நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று காலை பெங்களூரில் இருந்து கிளம்பி இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார், முதலில் அவர் ராமாவரம் தோட்டம் சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அதன் பின்னர் திநகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டிற்கு சென்றார்.
 
இந்த நிலையில் சசிகலா வரும் வழியில் காரின் மீது மலர்களை தூவியும் பட்டாசுகளை வெடித்தும் வாணவேடிக்கையுடன் உற்சாகமான வரவேற்பை அமமுகவினர் வரவேற்றனர். அந்த வகையில் சசிகலாவை வரவேற்க வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வண்டலூர் சேர்ந்த அமமுக பெண் தொண்டர் ஒருவரிடம் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டதாக தெரிகிறது
 
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவரிடம் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அதேபோல் அதிமுக தொண்டர் ஒருவரிடம் இருந்து 35 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன் திருடு போய்விட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது