ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (07:36 IST)

விஜய் கட்சி ஆரம்பித்தால் கூட்டணி வைக்க தயார்: சீமான்

விஜய் கட்சி ஆரம்பித்தால் அவர் விரும்பினால் அவருடன் இணைந்து கூட்டணி வைக்க தயார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  
 
நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்றும் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் விஜய் தனியாக போட்டியிடுவாரா அல்லது ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது விஜய் என்னுடன் கூட்டணி வைக்க விருப்பப்பட்டால் இணைந்து செயல்படுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  
 
விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன் என்றும் விஜய் என்னுடன் கூட்டணி வைக்க விருப்பப்பட்டால் இணைந்து செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva