வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (19:05 IST)

பிரபாஸின் வேடத்தில் நடிகர் விஜய்? மார்ஃபிங் செய்த வீடியோ வைரல்

vijay
நடிகர் பிரபாஸின் காட்சியை, ஏஐ தொழில் நுட்பம் மூலம்  மார்ஃபிங் செய்து,   நடிகர் விஜய்யின் முகத்தைப் பொருத்திய பாகுபாலி பட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜமெளலி இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் பாகுபலி. இப்படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராணா, அனுஷ்காம் ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ்  உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இப்படம் வசூலில் சாதனை படைத்ததுடன் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் நடிகர் பிரபாஸ் பெரிய சிவலிங்கம் ஒன்றை தன் தோளில் தூக்கிச் செல்வது போன்ற காட்சி பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில்,  நடிகர் பிரபாஸின் இந்தக் காட்சியை ஏஐ தொழில் நுட்பம் மூலம்  மார்ஃபிங் செய்து, நடிகர் விஜய்யின் முகத்தைப் பொருத்தி அந்த சிவலிங்கத்தைத் தூக்கிச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.