வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (15:45 IST)

சினிமாவில் எண்ட்ரி குடுத்த விஜய் மகன்..! முதல் படமே லைகாவோட! – மாஸ் அப்டேட்!

jasan sanjay
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது மகன் சஞ்சய். சமீபத்தில் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் இயக்குவதாக தகவல் வெளியானது.

எனவே, அவர் விரையில் இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகுவார் அப்படத்தை விஜய் தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் விஜய் மாதிரி அவர் மகன்   சஞ்சயும் இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். ஆனால், நடிகராக அல்ல இயக்குனராக. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் விஜய்யுடன் இணைந்து அவரது மகன் ஜேசன் சஞ்சய்  நடனமாடியது குறிப்பிடத்தக்கது.