செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 8 மார்ச் 2023 (10:59 IST)

மனைவியை 5 துண்டுகளாக வெட்டி 2 மாதங்கள் தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்த கணவன்..!

மனைவியை 5 துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் இரண்டு மாதங்களாக மறைத்து வைத்திருந்த கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பவன் என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பவன் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து தனது குழந்தைகளை அம்மா வீட்டில் விட்டுவிட்டு மனைவியை கழுத்தை நிறுத்தி கொலை செய்தார். 
 
அதன் பிறகு அவர் மனைவியின் உடலை 5 துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கள்ளநோட்டு கும்பலை பிடிப்பதற்காக சோதனை செய்த போலீசார் பவன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து தண்ணீர் தொட்டியில் மனைவியின் உடல் 5 துண்டுகளாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்
 
இதனை அடுத்து பவன் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
 
Edited by Mahendran