வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (08:20 IST)

கோவையில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ரவுடி... பரபரப்பு சம்பவம்..!

கோவையில் போலீசார் மீது ரவுடி துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கோவையில் கடந்த மாதம் அறிவாளால் வெட்டிய கும்பலை காவல்துறையினார் கைது செய்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களில் சஞ்சய் என்பவர் சரண் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் ஐந்து நாள் போலீஸ்காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை அடுத்து போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட மூவரையும் கரட்டு மடம் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்ற போது திடீரென மூன்று பேரும் போலீசாரை தாக்கி விட்டு துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயற்சி செய்தனர். இதனை அடுத்து போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் ரவுடி சஞ்சய் ராஜா காலில் காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva