1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (18:21 IST)

கடந்த 6 வருடங்களில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை: முதல்வர் பெருமிதம்..!

கடந்த ஆறு வருடங்களில் ஒரு விவசாயி ஊட தற்கொலை செய்து கொள்ளவில்லை என உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 
 
முன்பு கடன்காரர்களையே நம்பி இருந்த விவசாயிகள் தற்போது பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் அவரின் திட்டங்களால் பயனடைந்து வருகின்றனர் 
 
அதனால் கடந்த ஆறு வருடங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமையில் தொடர் கூறியுள்ளார். 
 
இது உண்மையிலேயே பெருமைக்குரிய சாதனை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva