புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (13:56 IST)

சென்னை மாதவரத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்....

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வு சொத்துவரி மற்றும் மின்சார கட்டணம் மற்றும் சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
 
அதன் ஒரு பகுதியாக சென்னை மாதவரத்தில் அதிமுக பகுதி செயலாளர்  கண்ணதாசன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது 
 
இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் 
 
இந்த மனித சங்கிலி போராட்டம் ஆனது சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஆண்கள் பெண்கள் என அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் அணிவகுத்து நின்று இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மேலும் அவர்கள் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் மற்றும் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவர்கள் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.