சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 28 செப்டம்பர் 2024 (10:58 IST)

திமுகவை கண்டித்து போராட்டத்தில் குதித்த அதிமுக - மதுரையில் அக்.9-ல் உண்ணாவிரதம்..!!

edapadi
வரும் அக்டோபர் 9ஆம் தேதி மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் திமுக அரசை கண்டித்து, உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழக இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்று 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.
 
அரசுத் துறைகளில் 5.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும்,

இளைஞர்கள், பெண்கள் நலனை முன்னிறுத்தி கழக ஆட்சிகளில் செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம்,  மாணவர்களுக்கு மடிக் கணினி உள்ளிட்ட அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட பல முத்தான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நிறுத்தியதைக் கண்டித்தும்,

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைபெரியாறு அணையை 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்தும், அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தையும், அதனால் ஏற்படும் சமூக விரோத குற்றங்களை கட்டுப்படுத்தத் தவறிய திரு. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும், 
   



 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புரட்சித் தலைவி பேரவை சார்பில், 9.10.2024 – புதன் கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, ``மதுரை பழங்காநத்தம், ஜெயம் தியேட்டர், எம்.ஜி.ஆர்.திடலில்  கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார், தலைமையில், கழக புரட்சித் தலைவி பேரவை மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையில்  மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.