திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 5 அக்டோபர் 2024 (16:56 IST)

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து, போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ. எஸ். மணியன் தற்போது வேதாரண்யம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்து வரும் நிலையில், நேற்று அவர் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் அவருடைய காரின் குறுக்கே வந்தது. வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் காரை திருப்பியுள்ளார். அப்போது, அருகிலிருந்த அம்மன் கோவில் ஒன்றின் சுற்றுச்சுவரில் மோதியதால் கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் முன் பக்கம் சிறிய அளவில் சேதமடைந்ததுடன், முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன், ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஆகியோர் சிறு காயங்களோடு உயிர் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து, மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Edited by Mahendran