வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (11:56 IST)

திமுகவிலிருந்து வந்தவர்களுக்கு பதவியா என அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு......

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அதிமுக பேரூர் கழகத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா,  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வழங்கி கொண்டிருந்த போது, 2 மற்றும் 10,12 வது வார்டு பகுதியில் ஒவ்வொரு வார்டிலும் இரு கிளைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், யார் உறுப்பினர் அடையாள அட்டையை பெருவது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
அப்போது திமுகவில் இருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்குவதா எனவும், அவர்களிடமிருந்து நாங்கள் உறுப்பினர் அட்டையை பெறுவதா என மூத்த அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனை கண்டு ஆத்திரமடைந்த ஆர்.பி.உதயக்குமார், வாக்குவாதம் செய்தவர்களை கோபத்துடன் கண்டித்து சமாதானப்படுத்தி, தானே மைக் மூலம் ஒவ்வொரு வார்டு நிர்வாகிகளையும் அழைத்து உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
 
முன்னாள் அமைச்சர் முன்னிலையிலேயே திமுகவிலிருந்து வந்தவர்களுக்கு பதவியா என அதிமுகவினர் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.