கனமழை குறித்து வானிலை இயக்குனர் சற்றுமுன் அளித்த தகவல்கள்
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழக கடலோர பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக நேற்று இந்திய வானியல் துறை அறிவித்தது. இந்த நிலையில் தற்போது வானிலை மைய இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் செம்பரப்பாக்கத்தில் 18 செமீ மழையும், விமான நிலையம் பகுதியில் 17 செமீ மழையும் பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி நுங்கம்பாக்கத்தில் 12 செமீட், கேளம்பாக்கத்தில் 11 செமீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக பகுதியில் 15 செமீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக் கூடும் என்று வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.