1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain in chennai and eight distric

சென்னையில் கனமழை அல்லது அதிக கனமழை - மிரட்டும் வானிலை மையம்

Chennai
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்னும் 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதிலும், கடந்த இரு நாட்களாக சென்னை, கடலூர், நாகை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுவை ஆகிய 8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே, 8 மாவட்டங்களுக்கும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாளைக்கு கனமழை அல்லது அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை எச்சரித்துள்ளது.
 
அதேபோல், வடகிழக்கு பருமழை தீவிரமடைந்துள்ளதால் நேற்று இரவு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்  திர்த்தது.
 
இதில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால் மழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், இந்த 8 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
சென்னை உள்பட 9 மாவட்டங்களில் கனமழை: அவசர உதவி எண்கள் அறிவிப்பு