1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. How many are affected by corona by districtwise

மாவட்டவாரியாக இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்

districtwise
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 38 பேர்களில் நாகை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 7 பேர்களும், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 6 பேர்களும், சென்னையில் 5 பேர்களும், சேலம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 3 பேர்களும், திருவாரூர் மாவட்டத்தில் 2 பேர்களும், நெல்லை, தேனி, தஞ்சை, வேலூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதனையடுத்து தமிழகத்தில் சென்னையில் 214 பேர்களும், கோவையில் 126 பேர்களும், திருப்பூரில் 79 பேர்களும், ஈரோட்டில் 70 பேர்களும், திண்டுக்கல்லில் 65 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
மாவட்டவாரியாக இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்
 
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்று 38 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்